விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 1,957 வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இன்று மற்றும் நாளை (டிசம்பர் 12, 13) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை திமுக துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்முடி ஆய்வு செய்தார்.
அப்போது, ஒரு வாக்காளருக்கு ஒன்பது ஓட்டுகள் இருப்பதாகவும், 89 வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குச்சாவடியில் ஓட்டுகள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் குளறுபடிகள் இருப்பதாகவும் பொன்முடி குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல்: திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு