விழுப்புரத்தில் உள்ள ஆசிரம இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த, சபீருல்லாவை மீட்டு தரக்கோரி சபீருல்லாவின் நண்பர் ஹலிதீன் ஆட்கொணர்வு மனு தாக்கல் தெய்தார். இந்த மனு மீதான விசாரணையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இறந்த சபீருல்லா என்னும் முதியவரின் உடலாக சந்தேகிக்கப்படும் உடலானது, கர்நாடகாவில் உள்ள ஜீபின் பேபியின் நண்பர் ஆட்டோராஜா நடத்தி வரும் ஆசிரமத்தின் அருகே உள்ள மசூதியின் அருகில் பத்ராவதி என்னும் இடத்தில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துப்போவதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இறந்த சபீருல்லா அவர்களின் உடலில் கிடைக்கப்பெற்ற எலும்புகளைக் கொண்டு அவருடைய மருமகனான சலீம் கானிடம் இரண்டு வார காலத்திற்குள் டிஎன்ஏ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்; சலீம் கான் அவர்களின் நண்பர் ஹலிதீன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும், சிபிசிஐடி காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் சிபிசிஐடி நடத்திய தீவிர விசாரணையில் எட்டு பேரில் இருவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் விவகாரம்; மாநில மனித உரிமைகள் ஆணையம் புதிய உத்தரவு