விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இவ்வளவு சிறப்புமிக்க தடுப்பணையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சரியான முறையில் பரமரிக்காததால் தடுப்பணை முற்றிலும் சிதலம் அடைந்துவிட்டது.
இதனால் மழை நீர் வீணாக கடலில் கலக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், மழைநீர் தேவையற்று கடலில் கலப்பதை தடுப்பதற்காக, பக்கிங்காம் கால்வாயில் புதிய தடுப்பணை கட்டி அதில் மழை நீரை தேக்கி சென்னைக்கு குடிநீர் எடுத்துச்செல்லும் நோக்கோடு ஒரு வருடத்திற்கு முன் ரூ. 161 கோடியை ஒதுக்கி, அதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கான பூமி பூஜை இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.