ETV Bharat / state

'உட்கட்சி பூசலால் ஆளுநரை சந்தித்தார் ஈபிஎஸ்' அமைச்சர் பொன்முடி - உட்கட்சி பூசலால் ஆளுநரை சந்தித்தார் ஈபிஎஸ்

உட்கட்சி பூசலால் ஆளுநரை ஈபிஎஸ் சந்தித்தார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேட்டி
அமைச்சர் பொன்முடி பேட்டி
author img

By

Published : Nov 25, 2022, 1:08 PM IST

விழுப்புரம்: வேம்பி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று (நவ. 24) நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கலைஞர் கொண்டு வந்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் முன்னேற்ற வளர்ச்சி திட்டத்தை தான் இங்கே தொடங்கி வைத்துள்ளோம். ஆற்றுப் பாசன நீர் அதிகம் இல்லாத இடங்களில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கும்.

அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் தரிசு நிலங்கள். இத்திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களில் உள்ள விவசாய நிலங்களின் மண்ணை பரிசோதனை செய்து, விளை நிலங்களாக மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதன் அடிப்படையில் 273 கிராமங்களில் இந்த திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 ஹெக்டேர் நிலங்களை முறையாக கண்டறிந்து தரிசு நிலங்கலா என ஆய்வு செய்து, பயிர் விதைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். திமுக மட்டுமே விவசாயிகளின் நலன் கருதி செயல்படும் ஒரே அரசு" என்றார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, ஆளுநரை குறைகூறும் அரசாகவே திமுக செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "எல்லாம் சொல்வார் எடப்பாடி பழனிசாமி. துப்பாக்கிச் சூட்டையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் அவர். ஆளுநரை பார்க்க போனதே வேறு. உட்கட்சி பூசலால் ஆளுநரை ஈபிஎஸ் சந்தித்தார்" என கூறினார்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் கண்கலங்கிய சுவாதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.