தமிழ்நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அம்மா கிளினிக் திறக்கப்பட்டுவருகிறது.
அம்மா கிளினிக் திறப்பு
அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடவாம்பலம், வி. அகரம், பானாம்பட்டு, திருப்பாச்சனூர், காவணிப்பாக்கம், ஆசான்குளம், கோனூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில், முதலமைச்சரின் அம்மா கிளினிக்கைத் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்துவைத்தார்.
அப்போது, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா. பி.சிங், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அம்மா மினி கிளீனிக் திட்டம்! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!