ETV Bharat / state

அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விழுப்புரத்தில் முழு கடையடைப்பு!

விழுப்புரத்தில், கடை ஊழியர் கொலை சம்பவத்தைக் கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம்
அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விழுப்புரத்தில் கடையடைப்பு போராட்டம்
author img

By

Published : Mar 30, 2023, 6:08 PM IST

அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விழுப்புரத்தில் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஜி ஆர் பி தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் எம் ஜி ரோடு பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு. இவர்கள் இருவரும் மது போதையில் விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு மார்க்கெட் பகுதியில் செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனைத் தட்டிக் கேட்கும் நபர்களை அடித்தும், கத்தியால் கீறி அச்சுறுத்தியும் வந்த படியே விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் எம் ஜி ரோடு, ஜோதி விருட்சம் பல்பொருள் அங்காடியில் இரண்டு நபர்கள் சண்டை இட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த கடை ஊழியர் இப்ராஹிம் என்ற நபர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் மற்றும் வல்லரசு, இப்ராஹிமை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இப்ராஹிம் பல்பொருள் அங்காடியிலேயே சரிந்து விழுந்துள்ளார். அவரை அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இப்ராஹிம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள், காவல் துறையினரால் நேற்று (மார்ச் 29) கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் இந்தச் சம்பவத்தின் பேரில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையில் விழுப்புரம் வணிகர் சங்கங்களின் பேரவைச் சார்பில் கடையடைப்புப் போராட்டத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டுள்ளன. 95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதால் விழுப்புரம் எம் ஜி ரோடு - மார்க்கெட் பகுதி, நேருஜி வீதி உள்ளிட்டப் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி கிடைக்கின்றன.

இந்தக் கடை அடைப்புப் போராட்டம் ஆனது மாலை 4 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நான்கு மணி வரை, கடை அடைப்புப் போராட்டமும் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வால் விழுப்புரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: ரயில்வே கேட்டை உடைத்து அலட்சியம் - கார் மீது ரயில் மோதி கோர விபத்து! - பயணிகள் நிலை?

இதையும் படிங்க: "உன்னை ஒன்னும் செய்யமாட்டேன் வாடா" - மாணவனை கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்த கலெக்டர்!

இதையும் படிங்க: சவால் நிறைந்த பயணம்; உயிரைப் பணயம் வைத்து யானையை இருப்பிடம் கொண்டு சேர்க்கும் லாரி ஓட்டுநரின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.