ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா - மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

மலையனூர் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Mar 1, 2020, 2:00 PM IST

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான மாசி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக் கொள்ளை விழாவும், 5ஆம் நாளான (26ம் தேதி) தீ மிதித்தல் திருவிழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலாவரும் காட்சி நடைபெற்றது.

இவ்விழாவின் ஏழாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மலையனூர் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

இவ்விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு விழுப்புரம், புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க: 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.