விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் பெங்களூரு ராம்ராஜ் பேட்டையை சேர்ந்த ஹரிஷ் என்பவரது மனைவி சுவேதாவிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில் கடந்த புதன்கிழமை சுபாஷ், சுவேதாவை தமது சொந்த ஊரான கல்லந்தல் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்றிரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு, அதில் மது போதையில் இருந்த சுபாஷ் விறகு கட்டையால் சுவேதாவை தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
மயக்கம் அடைந்த சுவேதாவின் தலையில் அருகிலிருந்த அம்மிக் கல்லைக் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் சுவேதாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளுக்கு சூடு வைத்த தாய் கைது!