விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலித்தொழிலாளியான இவருக்கும் மாலா என்பவருக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி, விஜயலட்சுமி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விஸ்வநாதன் தான் வசித்துவரும் நிலத்திற்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.
எனினும், ஆட்சியர் அவருக்கு பட்டா வழங்கும் நிலத்தின் அளவு குறைவாக உள்ளதாகக் கூறி பட்டா மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஆக.10) குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்குப் பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து விஸ்வநாதன், "அரசின் சலுகைகள் எனக்கு கிடைப்பதில்லை. அரை செண்ட்க்கும் குறைவாக பட்டா வழங்குகின்றனர். அதேபோல் எனக்கும் முறையாக பட்டா வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டா நிலத்தில் மணல் அள்ளுவது தொடர்பான வழக்கு: கனிம வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!