ETV Bharat / state

லாட்டரி சீட்டு தற்கொலை;குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - அமைச்சர்

விழுப்புரம்: லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

cve-shanmugam
cve-shanmugam
author img

By

Published : Dec 13, 2019, 4:30 PM IST

விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், 'தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இதனால் எவ்வித தடையுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தேர்தலைக் கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுகிறார்.

தமிழ் உள்பட உலகிலுள்ள எந்த மொழியிலும் ஸ்டாலினுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். அவர் ஒரு அதிசயத் தலைவர். இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள்.

அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்டரி சீட்டு மோகத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்றார்.

இதையும் படிங்க...

லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..

Intro:விழுப்புரம்: லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Body:
விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் பகுதியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்.,

"தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இதனால் எவ்வித தடையுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தேர்தலை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுகிறார்.

தமிழ் உள்பட உலகிலுள்ள எந்த மொழியிலும் ஸ்டாலினுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். அவர் ஒரு அதிசய தலைவர். இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இதுத்தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்டரி சீட்டு மோகத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் "என்றார்.

பேர் மீது லாட்டரி நாட்டத்தை சக்திகள் இருப்பதாக விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது இதுதொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார்கள்

Conclusion:இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கோலியனூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் ஆவின் சேர்மன் பேட்டை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.