விழுப்புரம்: திண்டிவனத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தனியார் உணவகத்துக்கு எதிரே நீண்ட நேரமாக லாரி ஒன்று நின்றுள்ளது.
மேலும் அந்த லாரி ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் நின்றுள்ளது. இதனால் காவல் துறையினர் சந்தேகத்துடன் லாரியில் சோதனை செய்துள்ளனர். அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் தற்கொலையை தடுக்க சிறப்பு ஆலோசனை மையம்