ETV Bharat / state

அந்தரத்தில் தொங்கிய லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே கருங்கல் ஏற்றிவந்த லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அந்தரத்தில் தொங்கிய லாரி
author img

By

Published : Aug 28, 2019, 5:15 PM IST

Updated : Aug 28, 2019, 6:51 PM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலைப் பகுதியிலிருந்து கருங்கல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி கீழ்அருங்குணம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை அருங்குணம் பகுதியைச் சேர்ந்த ரகுராமன்(35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் கீழ்அருங்குணம் பகுதியிலுள்ள வரதன் கல்குவாரி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கல்குவாரியில் வெட்டப்பட்ட நிலையில் உள்ள 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிநின்றது.

நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பின்பு, அப்பகுதி வழியே சென்ற சிலர் லாரி பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து ஓட்டுனர் ரகுராமனை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிலமணி நேரப்போராட்டத்திற்கு பிறகு லாரியும் மீட்கப்பட்டது.

Intro:விழுப்புரம்: திண்டிவனம் அருகே கருங்கல் ஏற்றிவந்த லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தொங்கியது. இதில் ஓட்டுனர் அதிசயமாக உயிர் தப்பினார்.Body:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலைப் பகுதியிலிருந்து கருங்கல் சக்கைகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி கீழ்அருங்குணம் பகுதிக்கு புறப்பட்டது.

லாரியை அருங்குணம் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

டிப்பர் லாரியானது இன்று அதிகாலை 5 மணியளவில் கீழ் அருங்குணம் பகுதியிலுள்ள வரதன் கல்குவாரி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது வரதனின் கல்குவாரியில் வெட்டப்பட்ட 300 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது.

ஆனால் லாரியானது உள்ளே விழாமல் அந்தரத்தில் தொங்கி நின்றது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ரகுராமன் மயக்கமடைந்தார்.

இந்நிலையில் காலை 7 மணி அளவில் அப்பகுதி வழியே சென்ற சிலர் லாரி குவாரி பள்ளத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் (பொறுப்பு) முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்த டிரைவர் ரகுராமனை பத்திரமாக மீட்டனர். லாரியும் மீட்கப்பட்டது.

Conclusion:இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Aug 28, 2019, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.