விழுப்புரம்: ஏனாதி மங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் அப்பகுதியில் 1,446 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எல்லீஸ் அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்க கூடிய உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. இதனால் அணைக்கட்டு பலவீனமாக வாய்ப்பு உள்ளதாகவும், எனவே உடைப்பை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உடைப்பை சீர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி திட்டம் அக்.27இல் மரக்காணத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!