ETV Bharat / state

தன்பாலின ரவுடி அவினேஷ் கொலை வழக்கு; 3 பேருக்கு குண்டாஸ்! - விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை

விழுப்புரத்தில் தன்பாலின உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி சிறுவர்களை கொலை செய்துவந்த, பிரபல ரவுடியை கொன்று வீசிய இளைஞர்களை மாவட்ட காவல்துறையினர் குண்டாசில் சிறையில் அடைத்துள்ளனர்.

3 பேருக்கு குண்டாஸ்
3 பேருக்கு குண்டாஸ்
author img

By

Published : May 14, 2022, 6:06 PM IST

விழுப்பரம் மாவட்டத்தில் 2 சிறுவர்களை தன்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தி கொடூரமாக கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைமணி என்பவரது மகன் அபினேஷ(22) கொலை செய்த 3 பேரை குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை தன்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தி கொலை செய்தவர் கொலை வழக்கு: கோட்டக்குப்பம் காவல் நிலைய சரகம் ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த 8.04.2022 அன்று சிறுவர்களை தன்பாலின உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி கொலை செய்துவந்த, பிரபல ரவுடி அவினேஷ் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட சதீஸ், அகமது அசேன், அப்பு என்கிற ஜவஹர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இவர்களது செயலை கட்டுப்படுத்த, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஐபிஎஸ் (IPS) பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் மோகன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு வருடம் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பித்தார்.

3 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவு: இந்த வழக்கில் சிறையில் உள்ள 3 பேர் மீது எஸ்.பி பரிந்துரையின்பேரில் மீண்டும் 14.05.2022 இன்று குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து மூன்று பேரையும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பிரபல ரவுடியான தன்பாலின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை - மூவர் கைது; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.