ETV Bharat / state

ஜெயலலிதா இல்லாததால் பல தவறுகள் நடக்கிறது..!' - அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 27, 2019, 1:15 PM IST

விழுப்புரம்: " ஜெயலலிதா இல்லாததால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் போன்ற தவறுகளை செய்து வருகிறார்கள்" என்று, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சி செலுத்தி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை மீண்டும் அக்கட்சி கையில் எடுத்துள்ளது. அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக அதிமுக கட்சிக்குள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

”அரசு கொறடா மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பரிந்துரை செய்வதாக கூறியதை பார்த்தேன். எதற்காக தகுதி நீக்கம் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. நான் அதிமுக கட்சியில்தான் இருக்கிறேன். அக்கட்சிக்கு எதிராகவோ, அரசு கொறடாவிற்கு எதிராகவோ சட்டப்பேரவையில் நான் எதுவும் வாக்களிக்கவில்லை. இந்த அரசாங்கத்திற்கும், அரசு கொறடாவிற்கும் கட்டுபட்டுதான் செயல்பட்டு வருகிறேன்.

நான் திமுகவிற்கோ, காங்கிரஸூக்கோ, பாஜகவிற்கோ ஆதரவாக செல்லவில்லை. தற்போது ஆட்சியில் உள்ளவர்களால் தேர்ந்தெடுக்கபட்ட பொதுச்செயலாளர் சசிகலாவோடுதான் இருக்கிறேனே தவிர, ஸ்டாலினிடமோ, சோனியா காந்தியிடமோ நான் இல்லை. ஆனால் அதிமுக கட்சியில்தான் நான் இருக்கிறேன். அதிமுக உறுப்பினராகவும் தொடர்ந்து வருகிறேன். அப்படி இருக்கும்போது எதற்காக என்னை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அதற்குண்டான நடவடிக்கைகள் நோட்டீஸ் வந்தவுடன் சட்ட ரீதியாக சந்திப்பேன்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்ய வாக்களித்தவன் நான். அவர் முதலமைச்சராக அமருவதற்கு நானும் ஒரு காரணம். இருக்கிற சட்டப்பேரவை உறுப்பினர்களில் நானும் ஒருவனாக வாக்களித்தேன். ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எடப்பாடிக்குத்தான் வாக்களித்தார்கள். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இப்போது என்னை தகுதி நீக்கம் செய்ய போகிறார்கள் என்று சொன்னால் அதனை பார்க்கும்போது, ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் இதுபோன்ற தவறு நடக்கிறது, என்றார்.

எம்எல்ஏ பிரபு

பெரியசாமி கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி யில் சட்டமன்ற உறுப்பினர் பிரபு பேட்டியளித்தார் அப்போது..அரசு கொறடா மூன்று எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பரிந்துரை செய்வதாக கூறியதை பார்த்தேன் ...எதற்காக வந்து தகுதி நீக்கம் பண்ண வேண்டும் என்பது தெரியவில்லை .அதிமுக வில் தான் உள்ளோம் அமமுக என்பது அதிமுக வின் ஒரு அணி என்றும் அத தவிர் த்து இக்கட்சி எதிர்பாகவோ அல்லது அரசு கொறடாவிற்க்கு எதிர்பாகவோ சட்டமன்ற த்தில் வாக்களிக்கவில்லை .இந்த அரசாங்கத்திற்க்கு அரசு கொறடாவிற்க்கு கட்டுபட்டுதான் செயல்பட்டு வருகிறேன் ..திமுக வுக்கோ அல்லது காங்கிரஸ் கோ அல்லது பி ஜே பி க்கோ நான் ஆதரவாக செல்லவில்லை அதிமுக வின் ஒரு அங்கமாக இவர்களால் தேர்தெடுக்கபட்ட பொது செயலாளர் சின்னமாவோடு தான் இருக்கிறேனே தவிர திரு ஸ்டாலின் அவர்களிடத்திலோ சோனியா காந்தி அவர்களிடத்திலோ இல்லை நான் இருக்கிறது அதிமுகவில் தான் அதிமுக உறுப்பினராக தொடர்ந்து வருகிறேன் .எதற்காக அவர்கள் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை அதற்குண்டாந நடவடிக்கைகள் நோட்டிஸ் வந்தவுடன் சட்ட ரீதியாக சந்தித்து கொள்வதாக பேட்டியளித்தார்.அதன் பின் அம்மாவின் மரைவிற்க்கு பிறகு எடப்பாடி பழனி சாமியை முதல்வராக தேர்வு செய்ய வாக்களித்தவன் நான் என்றும் அவர் முதல்வராக அமர்வதற்கு நானும் ஒரு காரணம் எனவும் இருக்கிற சட்டமண்ற உறுப்பினர்களின் நானும் ஒருவனாக வாக்களித்தேன் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யபட்ட 18 பேரும் எடப்பாடிக்குதான் வாக்களித்தார்கள் யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை .இப்போது என்னை தகுதி நீக்கம் செய்ய போகிறார்கள் என்று சொன்னால் அதனை பார்க்கும்.போது அம்மா அவர்கள் இல்லாத காரணத்தினால் இவையெல்லாம் நடப்பதாக அவர் தெரிவித்தார் ...அமமுக வை கட்சியாக இப்போது தான் பதிவு செய்ய சென்றுள்ளார்கள் அதற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது ..அதிமுக வுடைய உறுப்பினர் நான் அதிமுக வுடைய அணி அமமுக என பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.