விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "காடுவெட்டி குரு உடல்நிலை மோசமாக இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
அவர் உயிர்நீத்த தருணத்தில், குருவின் உடலை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய மூன்று லட்ச ரூபாயைக் கூட ராமதாஸ் கொடுக்கவில்லை. நான்தான் கொடுத்தேன். இன்று அவரது குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
அதேபோல் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த 21 வன்னியர் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கின்றன. அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் ராமதாஸ். வன்னிய சமூக மக்களுக்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் செய்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்" என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பணியால் காத்தாடும் தலைமைச் செயலகம் - ஏமாற்றத்தில் மக்கள்