ETV Bharat / state

'பெண்களை இழிவுபடுத்தும் திமுகவுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்!'

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

amitsha
அமித் ஷா
author img

By

Published : Apr 2, 2021, 2:13 PM IST

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "திருக்கோவிலூர் 108 வைணவ தலங்களில் பிரசித்திப்பெற்ற நகரமாக உள்ளது. இங்கு விஷ்ணுவும், சிவனும் ஒருசேர இருப்பது பெருமைக்குரியது. நான் இந்த மண்ணை கையெடுத்து கும்பிடுகிறேன். பாஜக, அதிமுக, பாமக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

தேசிய ஜனநாயகக் கட்சிக்கும் ஊழல் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கும்தான் போட்டி. எம்ஜிஆர் உண்மையான மக்கள் நலனுக்கான தலைவர் ஆவார். ஏழை எளிய மக்களின் தலைவர் ஆவார்.

ஜெயலலிதா ஒரு பெண் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணம். மோடி வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றுள்ளனர். திமுக, காங்கிரஸ் என்றால் லஞ்சம், ரவுடியிசம், நில அபகரிப்பு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை

சமீபத்தில் ஆ. ராசா, தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை குறித்து தவறாகவும், இழிவாகவும் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் ஜெயலலிதாவைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களைச் செய்துவந்தனர். தமிழ்நாடு மக்கள் பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மோடி தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவராவார். அவர் எங்கு சென்று பேசினாலும் ஒரு திருக்குறளை மேற்கோள்காட்டியே பேசுவார். சோனியாவிற்கும் ராகுலைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியைப் பற்றிதான் கவலை.

தமிழ்நாடு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்களின் பிள்ளைகளைப் பற்றிதான் கவலை. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் சாலை வசதிக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பிரதமரே வாங்க; எங்களுக்கு ஆதரவு தாங்க!' - திமுக வேட்பாளர்கள் பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.