விழுப்புரம்: மாநில உரிமை மீட்பின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இரு சக்கர வாகன பிரசார பேரணியை கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இருசக்கர வாகன பேரணி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி வருகை புரிந்ததையொட்டி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இளைஞர்களை வரவேற்று விக்கிரவாண்டி தொகுதிக்கான பிரசாரத்தை விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகில் இருந்து மாலை அணிவித்து மற்றும் சால்வை அனைத்தும் வரவேற்றார்.
இருசக்கர வாகனத்தில் அமைச்சர் பொன்முடி அமர்ந்து கொண்டு முண்டியம்பாக்கம், சிந்தாமணி வழியாக விழுப்புரம் நகர் வரை இருசக்கர வாகனத்தில் பின் அமர்ந்துவாரு தொடர்ந்த வாகன பேரணியில் சென்றார். இந்நிகழ்வில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், இளைஞரணி செயலாளர் தினகரன், கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேரணியின் போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "திமுக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டு மக்களிடையே சென்றடையும் முறையில் கன்னியாகுமரியில் பேரணியை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் சேலத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் பெருவாரியான இளைஞர்கள் கலந்து கொண்டு திமுகவின் சாதனை மற்றும் கொள்கைகளை மக்களுடைய எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது திருவண்ணாமலையில் இருந்து பயணம் செய்து செஞ்சி மகிழும், விக்கிரவாண்டி வழியாக விழுப்புரம் நகரை வந்தடைந்த இந்த இளைஞர்கள் இன்று(நவ.19) இரவு விழுப்புரத்தில் தங்கிவிட்டு நாளைய(நவ.20) தினம் வளவனூர் வழியாக புதுவைச் செல்கின்றனர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 நமது என்பதனையும் தாண்டி, நாற்பதும் நம்முடையது என்னும் தமிழ்நாடு முதலமைச்சரின் வாசனத்தை நம்முடைய இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகள்!