ETV Bharat / state

'ஊரடங்கினால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது': ராதாகிருஷ்ணன் - தடுப்பூசி கையிருப்பு

விழுப்புரம்: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், health secretary radhakrishnan pressmeet in villupuram
health secretary radhakrishnan pressmeet in villupuram
author img

By

Published : Jun 5, 2021, 6:12 AM IST

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்றனர்.

பாதிப்பு குறைவு

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் மே 11ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக, கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளது. தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனாவை முழுமையாக கட்டுபடுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,"தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறாததும், மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு சிகிச்சைக்காக வருவதாலும்தான் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

கரோனா, கறுப்புப் பூஞ்சை நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அச்சுறுத்தலா கறுப்புப் பூஞ்சை?

தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒன்றிய அரசிடம் 32 ஆயிரம் ஆம்பியூல்ஸ் கேட்கப்பட்ட நிலையில், பாதிப்புக்கு ஏற்ப ஒன்றிய அரசு தடுப்பு மருந்துகள் வழங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோயால் 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 679 பேர் சிகிச்சைப் பெற்றும், 33 பேர் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடு திரும்பியும், 37 பேர் சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்தும் உள்ளனர்.

தடுப்பூசி கையிருப்பு

கறுப்புப் பூஞ்சை நோயால் ஆண்கள் 546 பேரும், பெண்கள் 203 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக சென்னை, கோயம்புத்தூர், வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா பரிசோதனை மேற்கொண்டால், 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு 1.01 கோடி கரோனா தடுப்பூசியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிலையில், 93 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில், தற்போது 3 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் கையிருப்பு உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை கருத்துக் கேட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.