விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் சேவியர். இவர் சமீபகாலமாக நடைபெற்று வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல் போக்கு குறித்து கவலை தெரிவித்து வருகிறார்.
அவற்றை சரிசெய்யும் விதமாக , மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்து வருகிறார். மேலும் மாணவர்கள் கையில் கட்டியிருந்த சாதிய அடையாளங்களை அகற்றியும், நன்னடத்தை குறித்து அறிவுரைகளை வழங்கியும் வருகிறார்.
குறிப்பாக இவர் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து வருகிறார். இவருடைய முயற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்