கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலுார் ஊராட்சி செயலர் கண்ணன் (45). இவர் 22ஆம் தேதி மாலை அதே ஊரைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் முருகன் (32) என்பவர் உதவியுடன் சித்தலுார் கிராம சேவை மைய அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான பொருட்களை டிராக்டரில் ஏற்றிச் செல்வதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த தியாக துருகம் பி.டி.ஓ., துரைசாமி, சம்பவ இடத்திற்குச் சென்றபோது, டிராக்டரில் பொருட்களை ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஊர் இளைஞர்கள் டிராக்டரை துரத்திச் சென்று கண்டாச்சிமங்கலம் அருகே நிறுத்திப் பார்த்தபோது, அரசுக்கு சொந்தமான பழைய பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு!
விசாரணையில் ஊராட்சி செயலர் கண்ணன் கூறியதன் பேரில், பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு பொருட்களை ஏற்றிச் செல்வதாக டிராக்டர் ஓட்டுநர் முருகன் கூறியுள்ளார். அப்போது அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த கண்ணனுடன், ஓட்டுநர் முருகன் தப்பிச் சென்றுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த பி.டி.ஓ., துரைசாமி, டிராக்டரை அலுவலக பொருட்களுடன் பறிமுதல் செய்து, வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து ஊராட்சி செயலர் கண்ணன், டிராக்டர் டிரைவர் முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
மேலும் இது போல சம்பவங்கள் அதிகம் இங்கு நடந்துள்ளதாகவும், அதற்கு சம்பத்தப்பட்ட அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில், வரஞ்சரம் காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.