ETV Bharat / state

'ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்' - சி.வி.சண்முகம்

விழுப்புரம்: ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் -சி.வி.சண்முகம்

author img

By

Published : Feb 12, 2020, 3:47 PM IST

விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடியும் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் ரூ.5 கோடியும் தார்ச்சாலை மற்றும் புதிய நகராட்சி கட்டட அடிக்கல் நாட்டு விழாவும் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், “ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோம். ஏழு பேர் விடுதலை ஆளுநர் கையில் உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தின் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என காத்திருக்கிறோம். தமிழ்நாடு மக்களின், தமிழக அரசின் எதிர்பார்ப்பு அதுதான். இதுவரை எந்த அரசும் எடுத்திடாத முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" எனக் கூறினார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் -சி.வி.சண்முகம்

மேலும், “ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நீட்டி முழக்குகிறவர்கள் எல்லாம் ஆட்சியில் இருக்கும் போது, துரும்பைக் கூட கிள்ளவில்லை. நளினியைத் தவிர, மற்ற அனைவரையும் தூக்கில் போடலாம் என அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் எல்லாம் இன்று வாய்கிழிய பேசுகிறார்கள். அவர்களுக்கு இதுபற்றி பேசத் தகுதி இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.