விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைக்கும் பக்தர்களிடம், அம்மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆலோசனை நடத்தினார்.
![ganesha_chathurthi_advisory conducted by deputy sp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-02-ganesha-chathurthi-advisory-meet-visual-script-tn10020_28082019204219_2808f_1567005139_769.jpg)
கூட்டத்தில் கலந்துகொண்ட விநாயக பக்தர்களிடம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில்,
- ரசாயனம் தன்மையற்ற வண்ணத்தை உபயோகப்படுத்தி களிமண்ணாலான சிலைகளை உருவாக்க வேண்டும்.
- சிலை பத்து அடி உயரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,
- கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அமைக்கக்கூடாது.
- மற்ற மதத்தினர் வழிபாட்டு தலங்கள் அருகே அமைக்கக் கூடாது, ஜாதி மத மோதல்கள் எழக்கூடாது.
- மின்சாரம் திருடக் கூடாது.
- ஜாதி அரசியல் தலைவர்களின் பதாகைகள் வைக்கக் கூடாது.விழுப்புரத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்
- ஆடல் பாடல் கச்சேரிகள் நடத்தக் கூடாது உள்ளிட்ட 43 நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை காவல்துறையினர் பக்தர்களுக்கு அளித்தனர். இதில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திருச்சி மணப்பாறையிலும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.