மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் இணைந்து விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது. இந்த முகாமிற்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் இதில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மார்பு, எலும்பு, மூட்டு, பல், கண், தோல் மற்றும் காசநோய் சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட பலருக்கு ரூ. 5,000 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.