விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சோதனைச்சாவடியில் முதல் நிலை காவலர் அழகுவேல் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டத்துக்கு புறம்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நிய மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.