விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதிவரை டெல்லி சென்று திரும்பியவர்கள், அவர்களது உறவினர்கள் என மொத்தம் 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தை தொழிலாளர்கள் மூலம் அதிவேகமாக கரோனா தொற்று பரவிய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 23ஆம் தேதி நிலவரப்படி அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326ஆக இருந்தது. இவர்களில் 308 பேர் தற்போதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அந்த மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கடந்த மூன்று நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் இருந்துவந்த சூழலில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க : விழுப்புரத்தில் இருந்து சொந்த ஊர் திரும்ப உதவக் கோரி தொழிலாளர்கள் மனு