விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், அலுவலக கட்டடம் அமைந்துள்ள, இரண்டாம் தளத்தில் மைக்ரோ டெக்னாலஜி (கரோனா பரிசோதனை முடிவுகள் பார்க்கும்) அறையில் நேற்று (ஜன. 03) நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது.
இதைக் கண்ட பாதுகாவலர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அங்கு பணியிலிருந்த இரண்டு ஊழியர்கள் அறையை பூட்டிவிட்டு டீ குடிக்க வெளியேறியதாக கூறப்படுகிறது. மின்கசிவு ஏற்பட்டு ஏசி தீ பிடித்ததுனாலே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சேதம்
யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், அந்த அறையிலிருந்த ஏ.சி, கணினி, கரோனா பரிசோதனை சம்பந்தப்பட்ட ஆவணம் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வானூரில் 12 குடிசை வீடுகள் தீயில் கருகி நாசம்!