ETV Bharat / state

விழுப்புரம் அருகே பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து - பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

விழுப்புரம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து-பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூலப் பொருட்கள் தீயில் கருகின

author img

By

Published : Jul 25, 2022, 9:31 AM IST

விழுப்புரம்: வளவனூரில் இந்தியன் மெட் மார்ட் இயங்கி வருகிறது. கலியமூர்த்தி என்பவர் இதன் உரிமையாளர் ஆவார். பெட் மார்ட் நிறுவனத்திற்கான ஷோபா, மெத்தை, தலையனை செய்வதற்காக பஞ்சு மூலப்பொருட்கள் அடங்கிய குடோன் அருகே உள்ள சகாதேவன் பேட்டை கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கலியமூர்த்தி தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்ற நிலையில், நேற்று மாலை ஆறரை மணி அளவில் இவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தன. தீ விபத்து குறித்து விரைந்து வந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து-பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூலப் பொருட்கள் தீயில் கருகின

இதில் முழுவதுமாக குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள், பஞ்சு மூட்டைகள் அனைத்தும் தீயில் கருகின. இந்த தீ விபத்தால் அருகே வசித்த பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகே அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர். இந்த தீவிபத்து குறித்து வளவனூர் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நம்பி கோயில் அருகே நீரோடையில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.