ETV Bharat / state

கந்துவட்டியால் நேர்ந்த கொடுமை: தந்தை, மகள் உயிரிழப்பு! - father and daughter died

விழுப்புரம்: விக்ரவாண்டி அருகே கந்துவட்டிக்கு பயந்து விஷம் குடித்த தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை
தந்தை
author img

By

Published : Nov 22, 2020, 9:47 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அடுத்த செஞ்சி தாலுக்கா நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (42). விவசாயியான இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவசாய பணிக்காக நாகந்தூரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகரின் (42) மூலமாக, திண்டிவனம் இடையன்குளம் பகுதியை சேர்ந்த சம்பத்திடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு ரூ.25 ஆயிரம் கடன் பெற்றார்.

இந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து 50 ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பத்திரத்தில் 2 லட்சம் ரூபாய் என எழுதி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, சொத்துக்களை ஜப்தி செய்து விடுவேன் என அய்யப்பனிடம், ராஜசேகர், சம்பத் இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் கடந்த 20ஆம் தேதி தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வெளியில் வந்து வாந்தி எடுத்தார்.

அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது இரண்டாவது மகள் ஆர்த்தீஸ்வரி (7), விஷம் கலந்திருப்பது தெரியாமல் மீதமிருந்த குளிர்பானத்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருப்பினும் அய்யப்பன் மற்றும் அவரது மகள் ஆர்த்தீஸ்வரி இருவரும் உயிரிழந்தனர். பிறகு இதுகுறித்து பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அய்யப்பனின் மனைவி மகேஸ்வரி புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் விஜி, உதவி ஆய்வாளர் ராஜாராமன், ஜெயபாலன் ஆகியோர் குற்றவாளிகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.