ETV Bharat / state

அமைச்சர் ஆப்சென்ட்; பிசுபிசுத்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் - அதிமுக கூட்டத்தில் காலியாக கிடந்த இருக்கைகள்

விழுப்புரம்: எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்காத நிலையில், அந்தக் கூட்டத்தில் குறைந்த அளவிலான அதிமுக தொண்டர்களே கலந்து கொண்டதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவேக் கிடந்தன.

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
author img

By

Published : Jan 23, 2020, 10:51 AM IST

அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மந்தகரை திடலில் நேற்று மாலை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென அவசர பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை சென்றுவிட்டதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதையடுத்து தலைமைக் கழக பேச்சாளர் அன்பழகன், விழுப்புரம் நகர நிர்வாகிகள் பாஸ்கர், ஜி.கே. ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் காலியாக இருந்த இருக்கைகள்

இதனால் சொற்ப அளவிலான தொண்டர்களே கூட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிமுக போன்ற மாபெரும் இயக்கத்தை நிறுவி, பல்வேறு சாதனைகளைப் புரிந்த எம்ஜிஆருக்கு அக்கட்சியினர் கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா? என பேசிக் கொண்டனர்.

இதையும் படிங்க: ரஜினியை தூக்கிப் பிடிக்கும் பாஜக... தூக்கி அடிக்கும் அதிமுக...

Intro:விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் குறைந்த அளவிலான தொண்டர்களே கலந்து கொண்டதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தன.

Body:அதிமுக நிறுவனர், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக விழுப்புரம் மந்தகரை திடலில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திடீரென அவசர பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை சென்று விட்டதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

இதையடுத்து தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், விழுப்புரம் நகர நிர்வாகிகள் பாஸ்கர், G.K.ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதனால் சொற்ப அளவிலான தொண்டர்களே கூட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.

Conclusion:இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை நிறுவி, பல்வேறு சாதனைகளை புரிந்த எம்ஜிஆருக்கு அக்கட்சியினர் கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா? என கேள்வி எழுப்பினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.