விழுப்புரம்: மின்மாற்றியை சரிசெய்ய சென்ற மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பந்த மின் ஊழியர் சாய்ராம். இவர் இன்று (டிச.13) காலை கோணவாயன் குப்பத்திலுள்ள மின்மாற்றியை பழுதுபார்த்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைநந்த பொதுமக்கள், மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.