ETV Bharat / state

விஜயகாந்த் பிறந்தநாள்: விழுப்புரம் தேமுதிக கட்சியினர் அசத்தல்! - party members

விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67ஆவது பிறந்தநாளையொட்டி விழுப்புரத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைகவசங்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

vijayakanth
author img

By

Published : Aug 28, 2019, 2:24 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67ஆவது பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் அமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் விஜயகாந்த் சார்பில் வழங்கப்பட்டன.

தலைகவசம் வழங்கிய தேமுதிக கட்சியினர்

அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஆயிரம் தலைக்கவசங்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுமார் 700 இருசக்கர வாகனங்களில் விழுப்புரம் முதல் விக்ரவாண்டி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Intro:விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67ஆவது பிறந்தநாளையொட்டி விழுப்புரத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைகவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

Body:தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67ஆவது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் அமைப்பு ரீதியாக தமிழகம் முழுவதும் 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரங்களை விஜயகாந்த் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஆயிரம் தலைக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுமார் 700 இருசக்கர வாகனங்களில் விழுப்புரம் முதல் விக்ரவாண்டி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Conclusion:அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன்.,

'தமிழகத்திலேயே மிக நீண்ட தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அதிகளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் பொருட்டும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், இன்று விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ரூ. 7 லட்சம் செலவில், ஆயிரம் பேருக்கு இலவச தலைகவசம் வழங்கப்படுகிறது' என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.