ETV Bharat / state

விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்; வியாபாரிகள் வேதனை - விற்பனை மந்தம்

விழுப்புரம்: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளின் விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

kallakurichi
author img

By

Published : Aug 21, 2019, 6:04 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இதற்காக கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் ஆறுமுகம் என்பவரிடம் விநாயகர் சிலைகள் உற்பத்தி பற்றி விசாரிக்கையில் அவர் கூறியதாவது, ‘நாங்கள் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை தை முதலே செய்ய ஆரம்பித்துவிடுவோம். சிலைகளை செய்ய நாங்கள் ஆட்கள் வைப்பதில்லை. மகன், மகள், மருமகன் என குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

விநாயகர் சிலைகளை நாங்களே வடிவமைத்து நாங்களே விற்பனையும் செய்து வருகிறோம். சிலைகள் செய்வது எளிதல்ல கடை வாடகை, மின்சாரம், உணவு, பெயிண்ட், போக்குவரத்துக்கு என நிறைய செலவுகளும் வேலைகளும் உள்ளது.

கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்

ஆனால், இந்த ஆண்டு சிலைகளின் விற்பனை தற்போது வரை அவ்வளவாக இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் வந்துவிடக் கூடாது. செலவு செய்த பணம் திரும்ப வந்தால் போதும் என்கின்ற அளவிற்கு விற்பனை உள்ளது.

எந்த தொழில் செய்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்கள், ஆனால் நாங்க பிள்ளையாரே செய்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் லாபம் தான் இல்லை’ என வருத்தம் தெரிவிக்கிறார் விற்பனையாளர் ஆறுமுகம்.

Intro:tn_vpm_02_vinaiyagar_silai_sale_vis_tn10026_HD

Body:tn_vpm_02_vinaiyagar_silai_sale_vis_tn10026_HD

Conclusion:கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை போன ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை மந்தமே !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஆண்டு ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்,அதேபோல் இந்த ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடுபடுவார்களா என சிலை வடிவுமமைப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் நமது ஈடிவி செய்தியாளர் அவர்களிடம் நேரில் சந்தித்து கேட்ட போது அவர்கள் கூறியாதவது.

நாங்கள் மகன்,மகள்,மருமகன்,மருமகள் என சேர்ந்து விநாயகர் சிலையை குடும்பமாக செய்து வருகிறோம்.நாங்கள் இரவு பகலாக என இரண்டு வேலைகளிலும் அயராத உழைத்து வருகிறோம்.ஆனால் போன ஆண்டை விட இந்த ஆண்டு எங்களுக்கு வியாபாரத்தில் கொஞ்சம் முகம் சுழிக்கவே வைக்கிறது,காரணம் மழை பொய்த்து போனதாலும் கடும் வறட்சி நிலவி வருவதாலும் அதற்குக்கேற்ப பொருளாதார நிலையும்,கிடு கிடு விலை உயர்வுமே காரணம் என்கிறார்கள்.போன ஆண்டை விட இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுதால் சிலை பார்க்க வருபவர்கள் குறைந்த விலைக்கே கேட்கறீர்கள்.இவ்ளோ விலை கொடுத்து வாங்கி சென்றாலும் சிலை கரைப்பதற்க்கே ஓடை,ஏரி, குளம்,குட்டையில் தமிநாட்டிலே தண்ணீர் இல்லை ஆகையால் அவ்ளோ அவ்ளோ விலை கொடுத்து வாங்குவதா என அஞ்சுகிறார்கள். நாங்களும் அதிகப்படியான விலை சொல்வதும் இல்லை ஒரு அடிக்கு ரூபாய் 1200 என விற்கின்றோம்.நாங்களும் விநாயகர் சதுர்த்திகாக தை மாதம் முதலே வேலை செய்ய ஆரம்பிக்கிறோம் கிட்டத்தட்ட 8 மாத காலமாக செய்கிறோம்.எங்களது சொந்த ஊர் விழுப்புரம் அருகே கிடராம் கிராமத்திலிருந்து தான் இங்கு வந்து கடை வாடகை எடுத்து நாங்களே சிலை வடிவமைத்து சிலையை விற்பனை செய்கிறோம்.கடை வாடகை பில்,கரண்ட் பில்,சாப்பாடு செலவு,சிலைக்கான பெயிண்ட் செலவு லாரி வாடகை என்றும் எல்லாம் இருக்கிறது.இந்த ஆண்டு லாபத்தில் போகவில்லை கூட என்றாலும் பரவாயில்லை ஆன நட்டத்திலே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறோம்.போட்ட காசே வந்த கூட போதுமானது என்று கூட நினைக்கிறோம்.எந்த தொழில் செய்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்கள்,ஆனால் நாங்க பிள்ளையாரே செய்து விற்பனை செய்து வருகிறோம்.அப்படி இந்த ஆண்டு ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை ஒரு வேலை இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் தந்தை தலை மேல் இருக்கும் கங்கை நதியைப்போல மழை பொழிந்தால் கூட சந்தோஷமாய் விநாயகர் சிலையினை கறைப்பதற்கு கூட வாங்கபவர்களா தெரியவில்லை என நம்மோடு மனம் திறந்தார்.

ஆறுமுகம்(சிலை வடிவமைப்பார்,விற்பனையாளர்) அவரது மனைவி லலிதா

ஈடிவி பாரத் இணையதள செய்திகளுக்காக
கள்ளக்குறிச்சியிலிருந்து பெரியசாமி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.