2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு அரசியல் காரணங்களால் தள்ளிப்போனது. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கட்சி நிர்வாகிகள் நவம்பர் 14ஆம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்தது.
அதனடிப்படையில், பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்., "நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் விழுப்புரம் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள் உரிய விண்ணப்பப் படிவத்தை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டக் கழக அலுவலகமான விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் படிவம் பெற இயலாதவர்கள் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள படிவத்தை தயார் செய்து பெறப்பட்ட விண்ணபங்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகம் அறிவித்துள்ள விருப்ப மனுக்கான தொகைகள் பின்வருமாறு
- நகர்மன்றத் தலைவர் 25,000 ரூபாய்,
- நகர்மன்ற உறுப்பினர் ரூ.5,000 ரூபாய்,
- பேரூராட்சித் தலைவர் 10,000 ரூபாய்,
- பேரூராட்சி மன்ற உறுப்பினர் 2,500 ரூபாய்,
- மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 10,000 ரூபாய்
- ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 5,000 ரூபாயினை செலுத்த வேண்டும்.
இதில் பட்டியலினத்தோர்,பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 20ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.