ETV Bharat / state

'திமுக வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான்' - அமைச்சர் சி.வி. சண்முகம்

திமுக வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான் என்றும் ஸ்டாலின் வாழ்வதும் பினாமி வாழ்க்கைதான் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

DMK life is a proxy life says law minister cv shanmugam
'திமுக வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான்' - சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 23, 2020, 5:23 PM IST

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநரை நேற்று சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு உத்தேச புகார்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

இது ஒன்றும் புதிது அல்ல. அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற புகாரை திமுகவினர் தெரிவித்துவருகின்றனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம் அதிமுகவுக்கு அவப்பெயர் உருவாக்குவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

குறிப்பாக, முதலமைச்சர் மீது விதியை மீறி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, டெண்டர் எடுத்து பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடராத நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடரப்படுவதாக குறிப்பிட்டு அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'திமுக வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான்' - சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

பாரத் நெட் டெண்டர் இதுவரை நடக்கவில்லை. ஆனாலும், அதிலும் ஊழல் செய்துள்ளதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

காலாவதியான மருந்துகளை விற்று கொள்ளை அடித்ததாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நில அபகரிப்பு பிரிவில் 83 வழக்குகள் உள்ளன. ஸ்டாலின் மீது 15 வழக்குகள் உள்ளன. முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது 10 வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு அதிமுகவினர் மீது குற்றச்சாட்டு கூறுவதற்கு தகுதியே இல்லை" என்றார்.

இதையும் படிங்க: ’நானும் விவசாயி தாங்க’: முதலமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.