ETV Bharat / state

விழுப்புரத்தில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பொன்முடி! - ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை

விழுப்புரம்: மாவட்டத்தில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கும் முகாமை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி இன்று (செப். 23) தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தொடக்கி வைத்த க.பொன்முடி..!

author img

By

Published : Sep 23, 2020, 6:47 PM IST

திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (செப்.23) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்த பொன்முடி

இதைத்தொடர்ந்து புதிதாக திமுகவில் இணையவழியாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஜனகராஜ், புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க...மதுரை அருகே கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.