ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வு நடத்தப்படுமா?

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்னை ஆற்றில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் கண்டெடுப்பு - அகழாய்வு நடத்தப்படுமா?

author img

By

Published : May 28, 2022, 2:09 PM IST

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் அருகே குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பண்டைய கால பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் உருவ அமைப்பு பார்ப்பதற்கு மற்ற பானை ஓடுகளை விட வித்தியாசமாக இருப்பதாக விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான செங்குட்டுவன் கூறியுள்ளார்.

அதேநேரம், தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பும் சிவப்பும் கலந்த 3 வகையில் உள்ளது. கருப்பு நிற பானை ஓடுகளின் மேல் பகுதிகளில் பள்ளவரி வடிவத்திலான அலங்கார கோடுகள் அமைந்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் கண்டெடுப்பு - அகழாய்வு நடத்தப்படுமா?

மேலும், இவ்வகை பானை ஓடுகள் ஆற்றின் மேற்கு பகுதியில் இருந்து தண்ணீரின் போக்கில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு பகுதியில் நடந்த இந்த ஆய்வில், மண்ணால் ஆன சுடுமண், தண்ணீர் குழாயின் ஒரு பகுதி, மேலும் மிகச் சிறிய மட்கலயம், மட்கலய மூடி, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, உடைந்த சுடுமண் கலயத்தின் விளிம்பு பகுதி போன்ற பல பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் மண்டல உதவி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த தொல்லியல் ஆய்வாளர் துளசிராமன், தடயங்களை ஆய்வு செய்ததில், இவ்வகை பானை ஓடுகளின் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தினை சார்ந்தது என தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் மற்றும் பண்டைய மனிதர்களின் வாழ்வியல் முறையை அறிய தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.