ETV Bharat / state

‘செந்தில் பாலாஜி வாங்கும் 10 ரூபாயில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு’ - சிவி சண்முகம் - அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த சண்முகம்

தமிழ்நாட்டில் இயங்குல் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதால பெறும் 10 ரூபாயில், 2 ரூபாய் செந்தில் பாலாஜிக்கு, மீதம் 8 ரூபாய் ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்வதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 29, 2023, 4:23 PM IST

திமுகவை கண்டித்து சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசியதாவது, "இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக என்ன சாதித்து இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியிருக்கிறதா? படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளது? விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக என்ன செய்திருக்கிறது.

அமைச்சராக பதவியேற்றிருக்கும் மஸ்தானுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. அவர் செய்யும் வேலை சாராயம் விற்பது தான். இதனை நாங்கள் கூறவில்லை. ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் காட்சிப்படுத்துகின்றன. சாராய ஜமீன் மருவூர் ராஜாவுக்கு மஸ்தான் கேக் ஊட்டுகிறார். கேட்டால் யாரென்று தெரியாது என்கிறார்.

திமுகவில் சேர்வதற்கு முன்பு மூன்று முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர். கவுன்சிலராக அவர் மனைவி உள்ளார். அவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் திமுகவின் மேற்பார்வையில் விழுப்புரம் முழுவதும் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல் துறை சிறந்த காவல் துறை. ஆனால் ஸ்டாலின் கையாலாகத்துறையாக ஆக்கிவிட்டார். பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.

சைலேந்திர பாபுக்கு என்ன வேலை? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உளவுத்துறை கொண்டு பல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காலையில் எழுந்தால் சைக்கிள் ஓட்டுகிறார். மு.க. ஸ்டாலின் வீட்டில் எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறார். காவல் துறை மு.க. ஸ்டாலின் குடும்பத்திற்கு ஏவல் வேலை செய்கிறது. காவல் துறை முதலிலேயே எல்லாவற்றையும் கவனித்திருந்தால் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்திருக்க மாட்டார்கள். டிஜிபி விளக்கம் கொடுத்துள்ளார், கள்ளச்சாராயம் அல்ல விஷச் சாராயம் என்று. அரளிவிதையை அரைத்து குடித்தால் என்ன, பால்டாயிலைக் குடித்தால் என்ன, விஷம் விஷம் தானே.

ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது, அவர் வெறும் பொம்மை. சாராய ஆலைகளின் லாபம் கரூர் கேங் மற்றும் ஸ்டாலின் குடும்பத்திற்கும்தான் செல்கிறது. ஒரு ஆண்டுக்கு மட்டும் கலால் துறைக்கு வரக்கூடிய வரி ரூ.10ஆயிரம் கோடி ஸ்டாலின் குடும்பத்திற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 220 பார்கள் உள்ளன. எந்த ஒரு பாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சொல்கிறார்.

அப்போது எப்படி மது பிரியர்கள் குடிக்கிறார்கள். அந்த மதுபானங்கள் எந்த கணக்கில் எழுதப்படுகிறது. இந்த அரசு போலி மதுபானங்களை கலால் வரி செலுத்தாமல் வந்த காரணத்தால் சத்தீஸ்கரில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டில் 2 ஆண்டு திமுக ஆட்சியில் ஏலம் விடாமல் முறைகேடாக நடத்தப்பட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10 ரூபாய் மந்திரி என்றால் செந்தில் பாலாஜிதான். அந்த 10 ரூபாயில் 2 ரூபாய் செந்தில் பாலாஜிக்கும், மீதம் 8 ரூபாய் திமுக குடும்பத்திற்கும் செல்கிறது" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குப்பை கிடங்கு எதிர்ப்பு நடைபயணம்: போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு... நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.