ETV Bharat / state

விழுப்புரத்தில் கெட்டுப்போன பிரியாணி விநியோகம்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்!

Villuppuram news: விழுப்புரத்தில் கெட்டுப்போன பிரியாணியை வழங்கியதாக கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்
விழுப்புரத்தில் கெட்டுப்போன பிரியாணி விநியோகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 7:40 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில், கெட்டுப் போன மட்டன் பிரியாணியை வழங்கியதாக லூயிஸ் கிறிஸ்டினா என்ற பெண் கெட்டுப் போன பிரியாணியுடன் உணவகத்தின் முன்பு, கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர், லூயிஸ் கிறிஸ்டினா. இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் ரூ.230க்கு மட்டன் பிரியாணி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் பிரியாணியை வீட்டுக்குச் சென்று சாப்பிட பிரித்த நிலையில், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லூயிஸ் கிறிஸ்டினா, பிரியாணியை கடைக்கு எடுத்துச் சென்று கடை ஊழியரிடம், பிரியாணி கெட்டுப்போய் உள்ளது என முறையிட்டுள்ளார்.

இதற்கு கடை ஊழியர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால், அவர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: வணியம்பாடி விபத்து மீட்பு பணியின் போது உயிரிழந்த காவலர் முரளி குடும்பத்திற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆறுதல்!

இது குறித்து லூயிஸ் கிறிஸ்டினா கூறுகையில், “இங்கு வாங்கிய பிரியாணியை பிரித்து சாப்பிட முற்பட்ட நிலையில், இதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், பிரியாணியில் இருந்த மட்டன் பிசுபிசுப்புத் தன்மையுடன் காணப்பட்டது. எனவே, இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த கடையில் ஆய்வு செய்து கடையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியாணியை சிறிது உட்கொண்ட காரணத்தினால் வாந்தி, பேதி உள்ளிட்டவை எனக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்று நேற்று இந்த உணவகத்திலிருந்து வாங்கிச் சென்ற சிக்கன் ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டதால் சிறு குழந்தை உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் இந்த உணவகத்தின் மற்றொரு கிளை விழுப்புரம் ரயில்வே நிலையம் எதிரில் அமைந்துள்ளது. இவ்வுணவகத்திலும் உணவு வழங்குவது முறையாக இல்லை என தொடர் குற்றச்சாட்டுகள் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.