கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவை தயாரிப்பதற்கான பயிற்சி ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான கிருமிநாசினி எளிய முறையில் தயாரிப்பதற்கான செயல்முறை விளக்கம் வாயிலாகப் பயிற்சியினை சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தயாரிக்கும்போது முகக்கவசம், கையுறை அணிந்து பாதுகாப்புடன் தயாரிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்