ETV Bharat / state

கரோனா நிவாரணத்திற்கு நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் :ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம்: கரோனா நிவாரண தொகை பெற நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரணம்: நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Apr 9, 2020, 11:07 AM IST

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பதிவுப்பெற்ற கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1000 வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர் நலவாரியம், அனைத்து உடல் உழைப்பு நலவாரியம் உள்ளிட்ட வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக நிவாரண தொகை வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்தவர்கள் வங்கி கணக்கை சரிபார்த்து கொள்ள வேண்டும். இதுநாள் வரை தங்களது வங்கி கணக்கு விவரங்களை நலவாரிய அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளாத தொழிலாளர்கள் உடனடியாக கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கட்செவி அஞ்சல் எண்ணுக்கு வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை கீழ்காணும் விவரங்கள் அடங்கிய பட்டியலாக தயார் செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், தொழிலாளர் நலவாரியத்தின் பதிவுஎண், வங்கி பெயர், கிளை, வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி எண் மற்றும் ஐஎம்சிஆர் எண், ஆதார், செல்லிடப்பேசி போன்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். தகவல்களை lossvpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9994838401 என்ற கட்செவி எண்ணுக்கோ அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.