மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இப்பாேராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மோடி அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’தீவிரவாதிகள் போல போராடும் விவசாயிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்’: தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் ஆவேசம்