விழுப்புரம்: தமிழ்நாட்டில் புதிதாக உருவான ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், வேட்புமனுதாக்கல் 15ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
688 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இதுவரை 841 பேரும், 5 ஆயிரத்து 88 வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,360 பேரும் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதால், வேட்பாளர் பட்டியிலை அவ்விரு கட்சிகளும் இன்னும் உறுதிசெய்யவில்லை. இதனால், இக்கட்சிகளைச் சேர்ந்த யாரும் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதுவரை மனுத்தாக்கல் செய்தவர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களே.
வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாதது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி அடுத்தடுத்து ஏலம்!