விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவுப்படி, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அருங்குறிக்கை புதூர் ஏரிக்கரை அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில சாராயம் சுமார் 2 ஆயிரம் லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள் 26 பேர் காயம்!
அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக கொரக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே கைப்பற்றப்பட்ட சாராயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, இந்த பணியில் ஈடுபட்ட காவலர்களை வெகுவாக பாராட்டினார்.