இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளரிடம் பேசிய முத்தரசன், 'பொன்பரப்பி சம்பவம் குறித்து சென்னையில் விசிக சார்பில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், வன்னியச் சமுதாய மக்களைத் துப்பாக்கியால் சுடுவேன் என்று நான் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து தினமும் எனது கைப்பேசியில் அறிமுகம் இல்லாத நபர்கள், அவதூறான வார்த்தைகளில் பேசி வருகின்றனர். இது நாகரீக அரசியலுக்கு அழகல்ல. இப்படிப்பட்ட நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறதா?
அப்படி நான் 19 நிமிடம் பேசிய காணொளியில் அவ்வாறு பேசி இருந்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார். பாமக நிறுவனர் ராமதாஸ் எனக்கு நெருங்கிய நண்பர்தான். என்னிடம் நேரடியாக விளக்கம் கேட்டால் சொல்லத் தயார்' என்றார்.