ETV Bharat / state

விழுப்புரம், குழியில் விழுந்த குழந்தையை மீட்ட துணிச்சல் இளைஞர்கள்!

author img

By

Published : Jan 17, 2020, 11:48 PM IST

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், தவறி விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

குழியில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்கள்
குழியில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்கள்

புதுச்சேரி மாநிலம் அரியூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் தனது மனைவி, 4 வயது மகள் கோபினியுடன், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியில் இருக்கும் தனது உறவினரான சரோஜாவின் வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபினி, அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 7அடி குழியில் தவறி விழுந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குழியில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்கள்

இந்நிலையில் குழந்தை விழுந்த குழிக்கு அருகிலேயே மற்றொரு குழியைத் தோண்டி குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த விடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகிவருகிறது.

மீட்புத் துறையின் உதவியை எதிர்பார்க்காமல் குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதையும் படிங்க: குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்!

Intro:விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த குழந்தையை அப்பகுதி இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.
Body:புதுவை மாநிலம் அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நேற்று (வியாழக்கிழமை) தனது மனைவி மற்றும் 4 வயது மகள் கோபினியுடன், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியில் இருக்கும் தனது உறவினரான சரோஜாவின் வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி கோபினி, அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த 7 அடி குழியில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்கள் அந்த குழிக்கும் அருகிலேயே மற்றொரு குழியை வெட்டி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இந்த விடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.
Conclusion:காவல் மற்றும் மீட்புத் துறையின் உதவியை எதிர்பார்க்காமல் குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.