ETV Bharat / state

'எத்தனை கோடி செலவானாலும் கடைக்கோடி மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும்!' - Chief Minister Palanisamy laid the foundation stone for the sea water drinking water project

விழுப்புரம்: எத்தனை கோடி செலவாகிறது என்பது முக்கியமில்லை; கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு  கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்  Seawater drinking water project  கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி  Chief Minister Palanisamy laid the foundation stone for the sea water drinking water project
Chief Minister Palanisamy
author img

By

Published : Feb 23, 2021, 11:56 AM IST

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவுடன் கூடிய குளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இதையடுத்து, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி உள்ளிட்ட ஒன்பது பணிகளுக்கு 1,745.152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பல ஆண்டு காலமாக மக்கள் வைத்த கோரிக்கையான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மரக்காணம் துறைமுகம் அமைப்பதற்கான திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைகள் உள்ள இடங்களில் அரசு முக்கியக் கவனம் செலுத்திவருகிறது.

ஏரி, குளம், குட்டைகள் உழவர்கள் பங்களிப்போடு குடிமராமத்துப் பணிகள் நிறைவேற்றப்பட்டுவருவதால் வேளாண் பெருங்குடி மக்கள் பயன் பெற்றுவருகிறார்கள். மக்கள் நன்மை அடைகின்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு மீது குறைகூறிவருகிறார். எதைச் சொல்கிறமோ அதையே செய்கிறோம். செய்வதை மட்டுமே சொல்கிறோம்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "விழுப்புரத்தில் நகர மையப்பகுதியில் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது அழகான பூங்காவாக மாற்றப்பட்டிருக்கிறது. பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் மக்கள் அமர்ந்தாலே மனக்குறைகள் நீங்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்திலிருந்து நகரம்வரை ஏழை மக்களுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கப்படும். நகரத்தில் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டித் தரப்பட்டு வீடு இல்லாதவர்களே இல்லை என்கின்ற நிலையை தமிழ்நாட்டில் அதிமுக அரசு கொண்டுவரும். அதிமுக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என பச்சைப் பொய்யை மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார்.

எத்தனை கோடி செலவாகிறது என்பது முக்கியமல்ல; கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்தக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வி கற்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை உயர்ந்திருக்கிறது.

எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்கியிருக்கிறோம். ஏழை மக்கள் முன்னேறுவதற்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்து சிறப்பாகச் செயலாற்றிவருகிறோம்" எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

இதையும் படிங்க: ‘நான் மந்திரவாதி அல்ல செயல்வாதி’ -முதலமைச்சர் சூளுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.