விழுப்புரம்: கடந்த ஜனவரி மாதம் 2021ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கிருந்த சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
தமிழ்நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஐபிஎஸ் அலுவலரின் பாலியல் குற்றச்சாட்டு
வழக்காக பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல் துறை மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையானது சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.
இவ்வழக்கு மீதான விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்க செய்யப்பட்டு அவர்கள் மீது ஐந்து குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐந்து முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் அரசு தரப்பு சாட்சிகளை ஏன் ஆஜர்படுத்தவில்லை என நீதிபதி புஷ்பராணி அதிருப்தி தெரிவித்தார். மேலும், அரசு தரப்பு சாட்சிகளை கட்டாயம் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி புஷ்பராணி இன்று (நவ.03) உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கருவைக் கலைக்க அப்பாவி இளைஞரை சிக்கவைத்து நாடகம்:இளம்பெண் உள்பட 3 பேருக்கு சிறை!