விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரயில்கள் ஒருமணிநேரம் தாமதமாக சென்றடைந்தன. விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர் ரயில்வே ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரிசெய்த பின்னர், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக் கூடிய கன்னியாகுமரி, நெல்லை, சேது, முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டது.