ETV Bharat / state

மத்திய அரசு தனியார் மயமாக்கலை துரிதப்படுத்துகிறது - எம்.பி. ரவிக்குமார்

author img

By

Published : Jan 22, 2020, 10:05 PM IST

விழுப்புரம் : மத்திய அரசு தற்போது தனியார் மயமாக்கலை துரிதப்படுத்தி கொண்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Central govt is accelerating privatization mp ravikumar vlp
எம்.பி. ரவிக்குமார்

விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் '2020 - பட்ஜெட் விழுப்புரத்தின் எதிர்பார்ப்பு' என்ற தலைப்பில் பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்.பி. ரவிக்குமார், "நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

எம்.பி. ரவிக்குமார்

இதனால் இந்தியா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் போராடுகிறார்கள். இதனை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசும் சூழல் நிலவுகிறது. ஆனால், பொருளாதாரத் தளத்தில் என்ன நடக்கிறது என பேசப்படுவதில்லை. மத்திய அரசு தற்போது தனியார் மயமாக்கலை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. லாபத்தில் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த பட்ஜெட்டில் ஒன்றேமுக்கால் லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்கள். தற்போது வரவுள்ள பட்ஜெட்டில் இதுபோன்ற அறிவிப்பு வருமா என்று அச்சமாக உள்ளது." என்றார்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு தேவையான பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்நிகழ்வில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதையும் படிங்க : ரஜினி ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின்படி இயங்குகிறார் - வேல்முருகன் குற்றச்சாட்டு

Intro:விழுப்புரம்: மத்திய அரசு தற்போது தனியார் மயமாக்கலை துரிதப்படுத்தி கொண்டிருப்பதாக விசிக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் கூறியுள்ளார்.

Body:'2020-பட்ஜெட் விழுப்புரத்தின் எதிர்பார்ப்பு' என்ற தலைப்பில் பொதுமக்கள், வியாபாரிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு தேவையான பல்வேறு முக்கிய தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.,

"நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் போராடுகிறார்கள். இதனை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசும் சூழல் நிலவுகிறது.

ஆனால், பொருளாதாரத் தளத்தில் என்ன நடக்கிறது என பேசப்படுவதில்லை. மத்திய அரசு தற்போது தனியார் மயமாக்கலை துரிதப்படுத்தி கொண்டிருக்கிறது. லாபமாக இயங்கிய பொதுத்துறை பங்குகளும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த பட்ஜெட்டில் ஒன்றேமுக்கால் லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்கள். தற்போது வர உள்ள பட்ஜெட்டில் இதுபோன்ற அறிவிப்பு வருமா என அச்சமாக உள்ளது" என்றார்.

Conclusion:இந்நிகழ்வில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.